![]() |
ஆடி அம்மாவாசை புண்ணியம் |
ஏன் முன்னோர்களை வழிபடவேண்டும்
நமது வாழ்வில் தினமும் எதாவது ஒரு பாவத்தை செய்யும் சூழ்நிலை இயல்பாகவே அமைந்து வருகிறது. தெரிந்து செய்யும் பாவங்கள் என்று அவை நீண்டு கொண்டே போகின்றனவே தவிர குறைவதில்லை. மனிதப்பிறவி அரியது நம்மை அன்புடன் பேணி, அருமையாக வளர்த்து ஆளாக்குகின்றனர் பெற்றோர். எவ்வித சுயநலமுமின்றி பாசத்தை கொட்டி பராமரிக்கும் தந்தையரை சரிவர புரிந்து கொண்டு தங்கள் கடமைகளை செய்பவர்கள் வெகுசிலரே!நமக்கு நல்வாழ்வு அளித்து சென்ற பித்ருக்களுக்கு பித்ரு தர்ப்பணபூஜையை செய்யாமல் தவறவிடுகின்றனர் சிலர். பித்ருக்களை திருப்தி செய்வதற்குத்தான் தர்ப்பணபூஜை. தேவலோக மூலிகையான தர்ப்பையால் எள் வைத்து ஜாதி, மத பேதமின்றி அனைவரும் தர்ப்பணம் செய்து மூதாதையரை மகிழ்விப்பது கடமை.மிகபுராதணமான நூல்களும், உபநிஷத்துக்களும் பித்ருபூஜையின் மகத்துவத்தை சிறப்பாக கூறியுள்ளன. திருவண்ணாமலையில் இன்றும் சிவபெருமான் வல்லாள மகாராஜவுக்கு தர்பணம் கொடுப்பது விழாவாகவே ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே தினமும் பித்ருக்களை நினைத்து பூஜித்து விட்டு மற்ற காரியங்களை தொடங்கவேண்டும். அந்த தினத்தில் எந்த ரூபத்திலும் பித்ருக்கள் நம்மிடையே வருவார்கள். அதனால் அன்றைய தினத்தில் நம் வீடுதேடி வருபவர்களுக்கு இல்லை என்று கூறாமல் அன்னமிடுவது அவசியம்.
தினமும் காகத்திற்கு ஒருபிடி அன்னம் வைத்துவிட்டு பிறகு உண்பது பலவித தோஷங்களையும் போக்கும். காகத்தின் மூலம் பித்ருக்களுக்கு அவைபோய் சேரும். தை அமாவாசை, ஆடி அமாவாசை, சூரிய, சந்திர கிரண காலங்கள், மாதப்பிறப்பு, பவுர்ணமி, ஏகாதசி, சப்தமி, துவிதியை போன்ற நாட்களில் பித்ரு தர்ப்பணம் பூஜை செய்வது நல்லது.ஆண் துணையற்ற எந்த பெண்ணும் தன்னை ஆதரித்து காப்பாற்றி இறந்து போனவர்களுக்கு நன்றிக்கடனாக பித்ரு தர்பணம் பூஜையை செய்யலாம். இதை காருண்ய பித்ரு தர்ப்பணம் என்பவர். கேரளத்தில் உள்ள திருவல்லா கோயிலில் பெண்கள் பித்ரு தர்ப்பணம் செய்வது வழக்கமாக உள்ளது. தற்போது அதே கலாச்சாரம் குற்றாலம் அருவிக்கரை மற்றும் பாபநாசம் போன்ற பகுதிகளிலும் பரவிகடைபிடிக்கப்பட்டு வருகிறது.நன்மை ஆசீர்வதித்து காப்பாற்ற பித்ருக்கள் எப்போதும் தயாராக உள்ளபோது நாம் அவர்களை மறக்கலாமா? முன்னோர்களை வழிபட்டு முன்னேற்றமடைவோம்.
கருத்துகள்
கருத்துரையிடுக